கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியாரின் என்ஐஏ கஸ்டடி காவல் வரும் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனுக்களும் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொச்சி என்ஐஏ நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கஸ்டடியில் உள்ள சொப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை, கடந்த 18 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள வீடு உள்ளிட்ட பல இடங்களுக்கு கொண்டு சென்ற என்ஐஏ குழுவினர் அங்கு வைத்து அவர்களிடம் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வழக்கில் மற்றோர் குற்றவாளியான சரீத்தை 7 நாட்கள் என்ஐஏ கஸ்டடி காவலில் விசாரிக்க நீதிபதி கடந்த 17 ஆம் தேதி உத்தரவிட்டார். கடந்த 5 ஆம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், யுஏஇ துணை தூதரகத்தின் பேரில் வந்த போலி டிப்ளமேட்டிக் லக்கேஜில் இருந்து சுமார் 15 கோடி ரூபாய் பெறுமானமுள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.