ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனை விரைவில் இந்தியாவில் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கான உரிமம் விரைவில் பெறப்படும் என சோதனையை நடத்த இருக்கும் புனேசீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் பெரிய எண்ணிக்கையில் அதை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தலைவர் அடார் பூனாவால்லா தெரிவித்திருக்கிறார்.
மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் இந்த தடுப்பூசி சாதகமான பலனை தந்துள்ளதுடன், நோய் எதிர்ப்புக்கான T செல்களையும் உருவாக்குவதாக பிரபல மருத்துவ இதழான தி லான்செட் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை கடந்த ஏப்ரல் 23 ல் துவங்கியது. இதனிடையே இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி சோதனை முடிவுகள் தெரிய 3 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
class="twitter-tweet">Oxford #COVID19 Vaccine Shows Promise In Early Testing: Study https://t.co/GaoW6pNdlK pic.twitter.com/AiCzWwfAic
— NDTV (@ndtv) July 20, 2020