கொரோனா நோயாளிகள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் வணிகர்கள் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் மெய்நிகர் நிகழ்வில் பங்கேற்ற அவர் பேசும்போது, இந்தியாவில் முன்பு எதிர்பார்த்த அளவு கூட வென்டிலேட்டர்கள் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.
கடந்த 73 ஆண்டுகளில் இருந்ததை விட கடந்த 4 மாதங்களில் அதிக வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதனை தயாரிக்கும் புதிய உற்பத்தியாளர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், எனவே உற்பத்தித் திறனை அதிகரித்து வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.