கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் நாடு முழுவதும் ஜூலை 13 வரை 104 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் அறிக்கையில், தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத்தில் மருத்துவர்களின் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்ந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் 10 செவிலியர்களும் 5 சுகாதார ஊழியர்களும் உயிரிழந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட நேரம் பணியாற்றுதல், பணி தொடர்பான மனச்சோர்வு, பிபிஈ கிட் இல்லாமல் வேலை செய்தல் உள்ளிட்ட காரணங்களும் மருத்துவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.