கொரோனா தடுப்பூசி சோதனைகள் ஹைதராபாத் நிம்ஸ் ஆய்வகத்தில் தொடங்கியுள்ளன.
நாடு முழுவதும் 13 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகளை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதியளித்திருந்தது. இதன் ஒருபகுதியாக ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் நிஸாம் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முதல் கட்டத்தில், 375 தடுப்பூசிகளும், 2ம் கட்டத்தில் 875 தடுப்பூசிகளும் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட உள்ளன.
ஹைதராபாத்தில், மருத்துவ பரிசோதனைகளுக்காக 30 தன்னார்வலர்கள் நிம்ஸில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் நிம்ஸ் மருத்துவமனையில் நேற்று முதற்கட்டமாக இருவருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. ஊசி போடப்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அதிகரிரிகள் தெரிவித்துள்ளனர்.