அரசுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 10 அரசு வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மத்திய அரசு மாற்றியது.
வேறு வங்கிகளை இணைக்கும் திட்டம் ஏதும் இல்லை என அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், சில வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
முதல் கட்டமாக பேங்க் ஆஃப் இந்தியா, சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுகோ வங்கி, பஞ்சாப் சிந்து வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகியவற்றில் அரசின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.