ஊதியம் இல்லாமல் விடுப்பு அளிக்கும் திட்டத்தில் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான பைலட்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விமானிகளுக்கு ஆறு மாதம் முதல் இரண்டாண்டுகள் வரை ஊதியமில்லா விடுப்பு அளிப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும், இது ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது.
இது குறித்து பைலட்களுடன் பேச்சு நடத்தி வருவதாகக் கடந்த 16ஆம் தேதி விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய விமான பைலட்கள் சங்கம் சார்பில் ஏர் இந்தியா முதன்மை மேலாண் இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஊதியமில்லா விடுப்பு அளிக்கும் திட்டம் குறித்துத் தங்களுடன் பேச்சு நடத்தி வருவதாக அமைச்சர் கூறியது உண்மைக்கு மாறானது எனக் குறிப்பிட்டுள்ளது.
ஒப்புக்கொள்ளப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் ஒருதரப்பாக எந்த மாற்றத்தையும் செய்வது சட்டவிரோதமானது, நிறுவனத்தின் நலனுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.