என்கவுன்டரில் கொல்லப்பட்ட கான்பூர் தாதா விகாஸ் துபே போன்ற கொடும் குற்றவாளிக்கு எப்படி ஜாமின் வழங்கப்பட்டது என்பதில் தங்களுக்கு திகைப்பு ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற முதன்மை அமர்வு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில், விகாஸ் துபேக்கு ஜாமின் வழங்கப்பட்டது கீழமை நீதிமன்றங்களின் தோல்வியை காட்டுவதாகவும், அது போன்று பிறப்பிக்கப்பட்ட ஜாமின் உத்தரவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று, விகாஸ் துபே என்கவுன்டர் பற்றி விசாரிக்க ஏற்படுத்திய தனிநபர் விசாரணை குழுவில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஆகியோரை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதையும் ஏற்றுக் கொள்வதாக உத்தரப் பிரதேச அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.