பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளிடம் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் கட்டணக் கொள்ளை நடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பெங்களூருவில் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு கொரோனா நோயாளி ஒருவரை கொண்டு செல்ல 15000 ரூபாய் வசூலித்த கொடுமை நடந்துள்ளது. கொல்கத்தாவில் தனியார் ஆம்புலன்சுகள் 5 கிலோ மீட்டருக்கு 8000 ரூபாய் பறிப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர டிரைவர், உதவியாளர் ஆகியோருக்கு தனிநபர் பாதுகாப்பு கவசம் என்ற பெயரில் 3000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது, இதே மாநிலத்தில் 300 கிலோ மீட்டர் தூரம் செல்ல கொரோனா நோயாளி ஒருவரை கொண்டு செல்ல ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு, போக்குவரத்து அதிகாரிகள் தலையிட்டதன் பேரில் ஒரு லட்சம் ரூபாய் திருப்பி பெறப்பட்டது.
அதே நேரம், கேரளா,கோவா, இமாச்சல் பிரதேசத்தில் அரசு ஆம்புலன்சுகள் இலவசமாக சேவை நடத்துகின்றன.
ஒரு லட்சம் பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறினாலும், இந்தியாவில் சில மாநிலங்களில் 21000 பேருக்கு ஒன்று என்ற அளவில் அது அதிகமாகவே உள்ளது.