ஒடிஷாவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பராமரிப்பு பணிகளுக்காக 3 வாரங்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள ஜகத்சிங்பூர் மாவட்ட ஆட்சியர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வேண்டுக்கோளின்படி பாரதீப் பகுதியிலுள்ள, சுத்திகரிப்பு நிலையம் பராமரிப்புக்காக ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 15 வரை மூடப்படும் என தெரிவித்துள்ளார். இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.