சென்னை உள்ளிட்ட மேலும் 4 நகரங்களுக்கு சிறப்பு விமானங்களை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.
துபாயை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்கனவே டெல்லி, பெங்களூரு, கொச்சி, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு ஜூலை 11 முதல் 26 வரை சிறப்பு விமானங்களை இயக்குவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் விமான நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், கொச்சி, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருவழிப் போக்குவரத்துக்கு தகுதியான பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பெங்களூரு, அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவிலிருந்து ஒரு வழிப் பயணத்திற்கு தகுதியான பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.