கால்வன் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் சண்டையிட்ட 16 பீகார் வீரர்களை சந்தித்தது தொடர்பான வீடியோவை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை முடிவின்படி வெளியேறாமல் சீன வீரர்கள் கூடாரமிட்டு தங்கியிருந்ததை கண்டுபிடித்து கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி பீகார் வீரர்கள் அகற்ற முயன்றதாகவும், அப்போது 350 சீன வீரர்கள் உயரமான இடத்தில் இருந்து கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து குறைவாக எண்ணிக்கையில் இருந்ததையும் பொருட்படுத்தாமல் சீன வீரர்களுக்கு பீகார் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த சண்டையில் இந்திய தரப்பில் 20 பேர் பலியாகினர். சீன தரப்பில் 43 பேர் வரை காயம் மற்றும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் லுகுங் முகாமில் அந்த வீரர்களில் 16 பேரை ராஜ்நாத் சந்தித்து பேசினார். பின்னர் டெல்லி திரும்பிய அவர், அந்த வீடியோ காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.