உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களிடம் சோதிப்பதற்கு ஆரோக்கியமான நபர்களை நாளை முதல் தேர்வு செய்ய உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் அறிவித்துள்ளது.
கோவாக்சினின் கட்டம் ஒன்று மற்றும் கட்டம் இரண்டு மனித சோதனைக்கு டெல்லி எய்ம்ஸ் உள்பட 12 நிறுவனங்களை ஐசிஎம்ஆர் தேர்வு செய்துள்ளது.
முதல் கட்டமாக 375 பேரிடம் இது சோதித்துப் பார்க்கப்பட உள்ள நிலையில், 100 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையால் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எந்த வித நோய்களும் இல்லாத,கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 18 முதல் 55 வயது வரையிலான நபர்களை தேர்வு செய்ய உள்ளதாக டெல்லி எய்ம்சின் சமுதாய மருத்துவப் பிரிவு பேராசிரியர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார்.