ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 நாடுகளில் சிக்கித் தவித்த 648 இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பினர்.
சுற்றுலா உள்ளிட்ட பயணத்துக்காக வெளிநாடுகள் சென்றுவிட்டு கொரோனா ஊரடங்கு, சர்வதேச விமான சேவை ரத்து போன்றவற்றால் திரும்ப முடியாமல் தவிப்போரை சிறப்பு விமானம் மூலம் மத்திய அரசு திரும்ப அழைத்து வருகிறது.
வந்தே பாரத் மிஷன் எனும் பெயரிலான இந்நடவடிக்கையின்கீழ் இதுவரை ஆயிரகணக்கானோர் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா, ஓமன், துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 648 பேர் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுக்கு உட்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. இருப்பினும் கொரோனா வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தனிமைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.