2005 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 27 கோடி பேர் ஏழ்மையிலிருந்து மீட்கப்பட்டு உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனித மேம்பாட்டுதுறையின் முயற்சியில், 75 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியா அதிக அளவிலான மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேசமயம், கொரோனா தாக்கம் இந்த வளர்ச்சியை பாதிக்க கூடியதாக உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா 3 ஆண்டுகள் பின்தங்கக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வருவாயை கடந்து, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தைகள் இடைநிற்றலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.