கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால், அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கொரோனாவிலிருந்து மீண்டவர் அளிக்கும் 400 கிராம் பிளாஸ்மா மூலம் இருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு அதற்கான சான்றிதழும், சுகாதாரத்துறை சார்பில் கடிதமும் வழங்கப்படும் எனவும், குறிப்பிட்ட நபர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பத்தால், இந்த சான்றிதழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.