திரைப்பட நடிகர் சோனு சூட் மகாராஷ்டிர மாநில காவல்துறைக்கு 25 ஆயிரம் முகக் கவசங்களை (face shield) வழங்கி உதவியுள்ளார்.
ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப, சிறப்பு பேருந்துகள் மற்றும் விமானங்களை ஏற்பாடு செய்து சோனு சூட் உதவியிருந்தார்.
அவரது செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில், ஊரடங்கை அமல்படுத்துவதில் முன்னின்று செயல்பட்டு வரும் காவல்துறையினருக்கு உதவும் வகையில், சோனு சூட் 25 ஆயிரம் முகக்கவசங்களை வழங்கியுள்ளதாக, மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.