ஒடிசாவின் நான்கு மாவட்டங்களில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் அது சமூகப்பரவலாகும் என்று ஒடிசா அரசு அச்சம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோர்தா, ஜாஜ்பூர், கன்ஜாம், கட்டாக் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 66 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த மாவட்டங்களிலும், ரூர்கேலா மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒடிசாவின் தலைநகரான புவனேசுவரும் ஊரடங்கு எல்லைக்குட்பட்டிருப்பதால் அங்கும் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.வங்கிகள், கடைகள் ,அலுவலகங்கள் யாவும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பிற்பகல் ஒரு மணி வரைதான் காய்கறி, மளிகை பால் போன்றவை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்குவங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களும் மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.