அசாமில் கடந்த இரண்டு நாட்களாக பெய்யும் கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் 4500 க்கும் அதிகமான கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும், 48 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜோர்ஹாட், திப்ருகார், தின்சுகியா உள்ளிட்ட சில மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பல சாலைகளும், பாலங்களும், கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
அசாம் மாநிலம் முழுதும் 487 வெள்ள நிவாரண முகாம்Guwahati, Assamகள் அமைக்கப்பட்டு அவற்றில் ஒன்றேகால் லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.