கொரோனாவால் 99 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டனர் என்றும் 1300க்கும் அதிகமான மருத்துவர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா எனும் கொடிய நோய்த்தொற்றை முன்களத்தில் சந்தித்து வரும் மருத்துவர்கள் பலரும் அந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டிருக்கும் 1302 மருத்துவர்களில் 586 பேர் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்கள்
. இதே போல் உயிரிழந்தவர்களில் 74 சதவீதம் மருத்துவர்கள் 50 வயதை கடந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 பாதிப்பால் மரணங்கள் இனி தவிர்க்கப்படும் நிலை உருவாகும் என்றால் அது மருத்துவர்களிடமிருந்து தான் தொடங்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் ராஜன் சர்மா தெரிவித்துள்ளார்.