காலத்துக்கேற்றபடி இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக இளைஞர் திறன்கள் நாளையொட்டிப் பிரதமர் மோடி காணொலியில் பேசினார். அப்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் வணிகம், தொழில், சந்தை சூழல்கள் மாறியுள்ளதாகவும், அந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில் இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக்காலத்தில் ஒருவர் தனக்காக மட்டும் பொருளீட்டினால் மட்டும் போதாது என்றும், பிறருக்கு Skill, re-skill, upskill’: PM Modi
உதவுவதற்காகவும் பொருளீட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அறிவு, திறன் இரண்டும் வெவ்வேறு என்றும், புத்தகத்தைப் படிப்பதால் பெறும் அறிவைச் செயல்படுத்திப் பார்ப்பதே திறன் எனக் குறிப்பிட்டார்.
திறனுக்குக் காலவரையறை இல்லை என்றும், அது தொடர்ந்து மேம்பட்டு வரும் என்றும் தெரிவித்தார். திறன் தனித்தன்மை கொண்டது என்றும், அது ஒருவரைப் பிறரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் என்றும் மோடி குறிப்பிட்டார்.