உறுதி அளித்தபடி சாம்சங் நிறுவனத்திடம் இருந்து ஐ-போன்களுக்கான OLED பேனல்களை வாங்காததை அடுத்து, ஆப்பிள் நிறுவனம், சாம்சங்கிற்கு சுமார் 7600 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஐ-போன்களுக்கான OLED பேனல்களை பெரிய அளவில் வழங்கும் நிறுவனமாக சாம்சங் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் போன் விற்பனை குறைந்து OLED பேனல்களுக்கான தேவையும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கிற்கு சுமார் 5000 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் செலுத்திய அபராதத்தால், சாம்சங் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் அதிகரித்துள்ளது. இதனிடையே, சாம்சங் பேனல்களுக்கு பதிலாக, சீனாவின் BOE Tech நிறுவனத்தின் OLED பேனல்களை வாங்க ஆப்பிள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ போனின் 12 சீரியஸ் போன்களுக்கு இந்த நிறுவனம் தான் பேனல்களை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.