தனது கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கும் நடைமுறையை துவக்கி உள்ளதாக, இந்திய மருந்து நிறுவனமான ஸைடஸ் (Zydus) தெரிவித்துள்ளது.
ZyCoV-D என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, பிளாஸ்மிட் டிஎன்ஏ அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக ஸைடஸ் மருந்து நிறுவனம் கூறியுள்ளது.
மனிதர்களிடம் சோதிப்பதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வகம் மற்றும் விலங்கு சோதனைகளில் இந்த தடுப்பூசி பாதுகாப்பனது என உறுதி செய்யப்பட்டதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, உடலால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.