தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்துமாறு, மத்திய அரசுக்கு உச்ச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் கட்டணம் என்பது தொலைநோக்கு தாக்கங்களைக் கொண்டவை எனவும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு கட்டணம் தடையாக உள்ளது என்பது கவலை அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தனியார் மருத்துவமனை கூட்டமைப்புகளுடன் ஆலோசித்து, மாநிலங்கள் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி, கட்டணங்களை நெறிப்படுத்துவது தொடர்பாக ஒருவாரத்தில் ஒப்புதலுக்கான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.