ஆந்திர மாநிலத்தில் கிராம பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த பல்வேறு நவீன வசதிகளுடன் 52 பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அந்த வரிசையில், கிராமப்புற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் சளி உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்க 52 பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விஜயவாடாவில் தயாராக வைக்கப்பட்டுள்ள பேருந்து ஒவ்வொன்றின்மூலம் ஒரே நேரத்தில் 10 பேருக்கு பரிசோதனை நடத்த முடியும்.
இதனால் ஒரு பேருந்தில் இருக்கும் மருத்துவ குழுவால் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 பேரிடம் மாதிரிகளை சேகரிக்க முடியும். இதன்மூலம் முன்கூட்டியே கிராமங்களில் கொரோனா பாதிப்பை கண்டறிந்து தொற்று பரவாமல் தடுக்க முடியுமென சுகாதார அமைச்சர் அல்ல காலி கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.