தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் வரும் 21 ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க, என்ஐஏ-க்கு கொச்சி என்ஐஏ நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கொரோனா கண்காணிப்பு மையங்களில் காவலில் வைக்கப்பட்ட நிலையில், என்ஐஏ தாக்கல் செய்த கஸ்ட்டி மனு மீது இன்று விசாரணை நடந்தது. தங்கம் கடத்தி வரப்பட்ட லக்கேஜ் தங்களுடையது அல்ல என யுஏஇ துணைத் தூதரகம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், யுஏஇ தூதரகத்தின் போலி ஸ்டிக்கர்களையும், முத்திரைகளையும் பயன்படுத்தி கடத்தலில் ஈடுபட்டதாக கஸ்டடி மனுவில் என்ஐஏ தெரிவித்தது.
கேரளாவுக்கு கடத்தப்பட்ட தங்கம் நகை வியாபாரிகளுக்கு விற்கப்படவில்லை என்றும், அது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.