கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்குப் பருவக் காற்றின் மேற்கு முனை ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகியவற்றை அடைந்துள்ளதாகவும், கிழக்கு முனை இமயமலை அடிவாரத்தை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக அடுத்த 4 நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
இமயமலையை ஒட்டிய மேற்குவங்கப் பகுதிகளிலும் சிக்கிம் மாநிலத்திலும் மிகக் கனமழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்குவங்கத்தின் கங்கைச் சமவெளி, தமிழகம், தெலங்கானா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது.