முதல்முறையாக இந்திய ரயில்வே தரப்பில் எல்லை தாண்டிய பார்சல் சேவைக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து 16 பெட்டியில் 384 டன் எடையிலான, மிளகாய் வற்றல் ஏற்றப்பட்ட ரயிலானது வங்கதேசத்திற்கு இயக்கப்பட்டு உள்ளது.
சராசரியாக சாலைவழிப் போக்குவரத்திற்கு ஒரு டன்னிற்கு 7 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில், ரயில்வேயின் பார்சல் சேவையில் வெறும் 4 ஆயிரத்து 608 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக வங்கதேசத்திற்கு சாலை மார்க்கமாக மிளகாய் வற்றல் கொண்டு செல்வது பாதிக்கப்பட்டு இருப்பதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.