ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வெட்டுக்கிளிக் கூட்டம் தற்போது உத்தரப்பிரதேசத்திற்குள் புகுந்துள்ளது.
உன்னாவ், சிதாபூர், பாராபங்கி மற்றும் லக்னோவில் இந்த வெட்டுக்கிளித் திரள் பதிவாகி உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதில் லக்னோவில் நுழைந்த வெட்டுக்கிளித் திரள் நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக சிதாபூரில் வெட்டுக்கிளிகளால் நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இ
தனால் விவசாயிகள் ஒலிகளை எழுப்பியும், காவல்துறையினர் தங்கள் வாகனங்களில் சைரன்களை ஒலிக்க விட்டும் வெட்டுக்கிளிகளை விரட்ட முயற்சித்து வருகின்றனர். மேலும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் மருந்து தெளித்தும் வெட்டுக்கிளிகளை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.