கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
இருவருக்கும் பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இன்று அவர்கள் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகின்றனர். அவர்களை பத்து நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரியுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகளின் மனுவை நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.
இதன் பின்னர் ஸ்வப்னாவை திருச்சூரிலும் சந்தீப் நாயரை அங்கமலியில் உள்ள தனிமை முகாமிலும் அடைத்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்