மாநில அரசின் வரம்பிற்குள் வரும் பல்கலைகழகங்களின் செமஸ்டர் தேர்வுகள், இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தையும் டெல்லி அரசு ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டெல்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா, வகுப்புகளே நடைபெறாத நிலையில் மாணவர்களை தேர்வெழுத சொல்வது கடினம் என்றார்.
மேலும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு அசாதாரண தீர்வுகள் தேவை எனக் குறிப்பிட்ட அவர், அனைத்து செமஸ்டர் மற்றும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.
முந்தைய மதிப்பீட்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் கூறினார். அதன்படி தேர்வெழுதாமலேயே மாணவர்கள் அடுத்த செமஸ்டருக்கு செல்வதோடு, இறுதியாண்டு மாணவர்களுக்கும் தேர்வெழுதாமலேயே பட்டம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த உத்தரவு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் டெல்லி பல்கலைகழகத்துக்கு பொருந்தாது.