நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம் என்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் புகழாரம் சூட்டி உள்ளார்.
லண்டனில் நடைபெற்ற இந்தியா குளோபல் வீக் என்ற உலகளாவிய உச்சி மாநாட்டில், காணொலி மூலம் பங்கேற்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உரையாற்றினார்.
கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியில் இருந்து உலகத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய சூழலில் உள்ள நாம், இந்தியாவிடம் இருந்து பேராசை தன்மை இல்லாத பண்டைய யோக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் தத்துவமும், மதிப்புகளும் நிலையான எதிர்காலத்தை வலியுறுத்துவதாக இளவரசர் சார்லஸ் புகழ்ந்துரைத்துள்ளார். இது குறித்து இங்கிலாந்தில் புலம் பெயர்ந்தோர் இந்தியர்கள் மூலம் கற்றறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.