நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் விகிதம் சுமார் 62.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இதைத் தெரிவித்த அவர், கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 2.72 க்குள் இருப்பதாக கூறினார். எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது என்பதை குறித்து கவலை இல்லை என்ற அவர், சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் மூலம் தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தார்.
தற்போது நாளொன்றுக்கு சுமார் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் சோதனைகள் நடத்தப்படுவதாக அவர் கூறினார். மக்கள் தொகை அதிகமுள்ள பெரிய நாடாக இருந்த போதிலும் இது வரை கொரோனா இந்தியாவில் சமூக தொற்றக மாறவில்லை எனஅவர் குறிப்பிட்டார். ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளூர் பரவல் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.