ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். அதன்மீது பாகிஸ்தான் கண் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தீவிரவாதம் மூலமாக மறைமுகப் போர் தொடுப்பதை கைவிட வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறையின் தீவிரவாத எதிரப்புப் பிரிவின் இணைச் செயலர் மகாவீர் சிங்வி வெளியிட்ட அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்க்க உறுதி கொண்டு இருப்பதாகவும் மனித உரிமைகளை பாதுகாக்க காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பாகிஸ்தானில் மட்டும்தான் சிறுபான்மையினர்களாக உள்ள சிந்திக்கள், சீக்கியர்கள் போன்றோரின் உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள இந்தியா பாகிஸ்தான் அரசு தீவிரவாத ஆதரவை தனது கொள்கையாக கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது.