நிதி நிறுவனமான டிஎச்எப்எல் மூவாயிரத்து 688 கோடி ரூபாய் வங்கி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக, அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
டிஎச்எப்எல் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளில் சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, போலி நிறுவனங்களின் பெயரில் கோடிக்கணக்கில் கடன் வழங்கியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இண்டஸ்லேண்ட் மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியும் டிஎச்எப்எல் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியில் புகார் அளித்துள்ளது.