ஆசியாவில், குறைந்த செலவில் விமான சேவையை வழங்கும் மலேசியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான ஏர் ஏசியாவை இந்தியாவைச் சேர்ந்தடாடா சன்ஸ் விலைக்கு வாங்கவிருப்பதாக வங்கிப் பரிமாற்றத் தகவல்கள் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா குழுமத்தின் நிறுவனம் நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஏர் ஏசியாவின் 49 % பங்குகளைக் டாடா சன்ஸ் கையகப்படுத்தவிருக்கிறது.ஏர்ஏசியா நிறுவனம் 235 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டவிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. . ஏர்ஏசியா நிறுவனத்தால் இவ்வளவு தெரிய தொகையை திரட்ட முடியாது என்று தணிக்கையாளர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் ஏர்ஏசியாவை டாட்டா குழுமம் கையகப்படுத்தவிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் பன்னாட்டு விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் கொரோனா பிரச்னையினால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகின்றன. அவற்றின் பங்கு மதிப்புகளும் சரிந்துள்ளன. இந்த சூழலைப் பயன்படுத்தி ஏர் ஏசியாவின் பங்குகளை மலிவு விலைக்கு டாடா சன்ஸ் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டாடா சன்ஸ் நிறுவனமும் ஏர் ஏசியா நிறுவனமும் இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை .