இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலவரம் குறித்து மத்திய அமைச்சர்கள் குழுவோடு டெல்லியில் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய ஆலோசனையின்போது இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என நிபுணர்கள் மீண்டும் தெரிவித்ததாக கூறினார்.
சில பகுதிகளில் வேண்டுமானால் தொற்று பரவல் அதிகமாக இருக்கலாம் எனவும், ஆனால் நாடு தழுவிய அடிப்படையில் பார்க்கும்போது, சமூக பரவலாக மாறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பில் உலகில் 3ஆவது இடத்தில் இந்தியா இருப்பதாக கூறப்படுவது பொருத்தமாக இல்லை என தெரிவித்த ஹர்ஷ்வர்த்தன், உலகில் 2ஆவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற கண்ணோட்டத்தில் விவரங்களை காண வேண்டும் என்றார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சராசரியாக 10 லட்சத்துக்கு 538ஆக உள்ளதாகவும், ஆனால்
உலகில் அதே எண்ணிக்கை 1,453ஆக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.