கொரோனா சிகிச்சையில், முடக்குவாத மருந்தான டெக்சாமீதசோன் போன்ற ஸ்டீராய்டு மருந்துகளை கொடுத்து சிகிச்சை அளிக்கும் நடைமுறையும் உள்ளது.
துவக்கத்தில், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ஸ்டீராய்டு மருந்துகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டுகிற அல்லது அதிக ஆபத்து அல்லாத கட்டத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கும் ஸ்டீராய்டு மருந்துகள் அளிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 ஆவது நாளில் இருந்து அனைத்து நோயாளிகளுக்கும் ஸ்டீராய்டு மருந்துகளை வழங்கும் நிலை வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த நேரத்தில் ஸ்டீராய்டு மருந்துகளை அளித்தால், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வெள்ளை ரத்த அணுக்களின் அழிவை தடுக்கலாம்.