விசாகப்பட்டினம் வாயுக்கசிவு வழக்கில் விபத்துக்கு காரணமாக இருந்த எல்,ஜி. பாலிமர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி , தொழில்நுட்ப இயக்குனர் ஆகிய இரு வெளிநாட்டவர் உள்பட 12 அதிகாரிகளும் ஊழியர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 14 பேர் உயிரிழந்தனர் . சாலையில் சென்றுக் கொண்டிருந்த பெண்கள் உட்பட பலர் மயங்கி விழுந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தென் கொரிய நிறுவனத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள், நிர்வாகத்தின் அலட்சியம் போன்றவை குறித்த விசாரணைக்குழுவின் 4 ஆயிரம் பக்கம் அறிக்கை முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.