நிதி நிறுவனமான எச்.டி.எப்.சி உள்ளிட்ட பங்குச்சந்தையில் பட்டியிலடப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் சீன முதலீடு செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஏப்ரல் மாதம் மத்தியில் வரையிலான பங்குச்சந்தை தரவுகளில், சீனாவின் பீபிள்ஸ் வங்கி எச்.டி.எப்.சி நிறுவனத்தில் 3,100 கோடி ரூபாயும், பிரமல் எண்டர்பிரைசஸில் 137 கோடி ரூபாயும், அம்புஜா சிமெண்டில் 122 கோடி ரூபாயும் முதலீடு செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த முதலீடுகள் குறிப்பிட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பீட்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக சமீபத்தில் வெளியான அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் சீனா முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.