இந்த ஆண்டு இறுதியில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை இருப்பதாக, தடுப்பூசி தயாரிப்பில் பிரபலமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
புனேயில் நடந்த RT-PCR சோதனை குழாய்களை கையாளுவதை எளிதாக்கும் Compact-XL என்ற மருத்துவ உபரணத்தின் அறிமுக விழாவில் பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அடார் பூனம்வாலா இதைத் தெரிவித்தார்.
தடுப்பூசிகளை அவசரப்பட்டு தயாரித்து வெளியிடுவது ஆபத்தானது என்ற அவர், தமது நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியில் பாதுகாப்பும், பலனும் கிடைக்கும் என்பதை உறுதி செய்த பின்னரே சந்தைப்படுத்தப்படும் என கூறினார். தடுப்பூசி வரும் வரை சோதனைகளை அதிகப்படுத்துவதே நல்லது எனவும் அவர் கூறினார்.