கொல்கத்தாவை சேர்ந்த நகைக்கடை நிறுவனம் ஒன்று 7,220 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 20 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 தனியார் வங்கிகளிடம் இருந்து 2,672 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதா வழக்கு பதிவாகி உள்ளது.
இந்தியாவில் அதிக வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள 100 நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனமும், அதன் இயக்குனர்களும் வெளிநாட்டு ஏற்றுமதி என்ற பெயரில் 7,220 கோடிஅளவிற்கு அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது பெமா எனப்படும் அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பெமா சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இதுவரை நோட்டீஸ் அனுப்பிய சம்பவங்களில் இதுதான் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர்.