100 ஆண்டுகளுக்கு மேல் அதிக பழமை வாய்ந்த 194 கலங்கரைவிளக்கங்களை சுற்றுலா மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை துவக்குமாறு, டெல்லியில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் கப்பல் போக்குவரத்து அமைச்சர் மனுஷ்க் மாண்டவியா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கலங்கரைவிளக்கங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவதற்காக, அவற்றை சுற்றி அருங்காட்சியகங்கள், மீன்காட்சியகம், குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் நீர்நிலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கலங்கரைவிளக்கங்களின் வரலாறு, அவை இயங்கும் விதம், அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியன குறித்து மக்களுக்கு விளக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.