குஜராத்தின் வதோதராவில் 13 அடி நீள ராட்சத முதலை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
வதோதரா அருகேவுள்ள மகாதேவ்புரா கிராமத்தில் விவசாய நிலத்தில் மிகப்பெரிய முதலை சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, முதலையை நேற்றிரவு கயிறு கட்டி பிடித்தனர். முதலை மிகவும் பெரிதாக இருந்ததால் கயிறு கொண்டு கட்டி இழுத்தது வனத்துறையினருக்கு சிரமமாக இருந்தது.
இருப்பினும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு முதலையை கயிற்றால் கட்டி கூண்டில் அடைத்தனர். இதையடுத்து அருகிலுள்ள நீர் நிலையில் முதலையை வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.