தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழைகொட்டி வருகிறது.
குஜராத்தில் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஜுனாகத் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்குப் முன் கட்டப்பட்ட ஆற்றுப் பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கம்பாலியா உள்ளிட்ட நகரங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர். மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில் 3 நாட்கள் கனமழைக்குப் பின் மிதமான மழை தொடர்கிறது.
அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் 3 லட்சத்து 86 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்தார். பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழையும் மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.