இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் 3 கட்டங்களாக 1100 பேர் மீது பரிசோதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சோதனையில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் 13-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு 18-ஆம் தேதி சோதனை தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முதல் கட்ட சோதனையில் பரிசோதிக்கப்படும் 125 பேர் 28 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த 750 பேரைக் கொண்டு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் டெல்லி மற்றும் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளிட்ட 12 இடங்களை தேர்வு செய்கிறது.