கொரோனாவை விரைவில் ஒழித்துக்கட்டிவிட முடியும் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிளாஸ்மா சிகிச்சைத் திட்டத்தின் கீழ் உள்ளாட்சித் துறை மற்றும் டாட்டா நிறுவனம் சார்பில் மும்பை மாநகராட்சிக்கு 20 ஆம்புலன்ஸ்கள் 100 வென்டிலேட்டர்கள் மற்றும் 10 கோடி ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநிலத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும், தொழில்முனைவோரும், மாநில அரசுடன் தோளோடு தோள் நின்று அயராது உழைத்தால் கொரோனாவை வெற்றிகொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
6000 லிட்டர் பிளாஸ்மாவை சேமிக்கும் திறனுடைய மும்பை மாநகராட்சியின் பிளாஸ்மா மையத்தை மேம்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க நிகழ்ச்சியில் கோரப்பட்டது.