கடந்த வெள்ளி அன்று கான்பூரில் 8 போலீசார், நிழல் உலக தாதா விகாஸ் துபே மற்றும் அவனது கும்பலால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவனுக்கு உளவு வேலை பார்த்த போலீஸ்காரர்கள் 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
படுகொலைகளுக்கும் பிறகு தப்பிச் சென்ற அந்த கும்பலில் இருந்த ஒருவன் கடந்த 5 ஆம் தேதி போலீசாரிடம் பிடிபட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் , போலீஸ் கைது செய்ய வரும் தகவல் போலீஸ் நிலையத்தில் இருந்தே விகாஸ் துபே-க்கு கூறப்பட்டது அம்பலமானது.
அதைத் தொடர்ந்து 115 போலீசாரின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் 3 போலீசார் சிக்கினர். அந்த வகையில் விகாஸ் துபே-க்கு உளவு பார்த்த உதவி ஆய்வாளர்கள் கேகே.சர்மா,குவார் பால், காவலர் ராஜீவ் ஆகியோர் பிடிபட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கான்பூர் ஐஜி மோகித் அகர்வால் தெரிவித்துள்ளார்.
விகாஸ் கும்பலால் கொல்லப்பட்ட போலீசாரின் உடல்களை அங்கேயே விட்டுவிட்டு ஓடிப்போன சவுபேபூர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி வினய் திவாரி ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.