கேரள மாநிலம் கண்ணூரில் இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
கண்ணூர் மாவட்டம் கவிகோத்தகரி காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்த ஷினு என்பவர், இரவு 11 மணி அளவில் 25 வயதான பெண்ணுடன் வெகுநேரம் போலீஸ் ஜீப்பில் சுற்றிய பிறகு, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார்.
இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேம்ராஜனுக்கு அனுப்பி வைத்தார். அதை அடுத்து காவல்கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையில் சம்பவம் உண்மை என உறுதியானது. இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஷினு பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.