கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை திருப்பி அனுப்புமாறு, மாநில அரசுகளுடன் ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது.
ரயில் போக்குவரத்து மேம்பட்டிற்காக அடுத்த ஆண்டிற்குள் முடிக்கும் நோக்கில், சுமார் 81 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணியில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்ட வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வர, ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை முன்பதிவு செய்வதோடு பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.